×

3447 மகளிர் குழுவினருக்கு ரூ.104.63 கோடி கடனுதவி கலெக்டர் அனீஷ்சேகர் வழங்கினார்

மதுரை, டிச. 15: மதுரை மாவட்டத்தில், 3,447 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.104.63 கோடி கடனுதவியை கலெக்டர் அனீஷ்சேகர் வழங்கினார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சுய உதவிக் குழு இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கி, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சுய சார்புதன்மை மூலம் பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் ஆகிய மூன்று முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் மூலம், நேற்றும் தமிழகம் முழுவதும் 58,463 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 7,56,142 உறுப்பினர்களுக்கு ரூ.2749.85 கோடி மதிப்பிலான கடன் உதவிகள், நலத் திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மதுரை மாவட்டத்தில், மதுரை லட்சுமிசுந்தரம் திருமண மண்டபத்தில் நடந்த விழாவிற்கு கலெக்டர் அனீஷ்சேகர் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், மாவட்டத்தில் உள்ள 3,447 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 37,089 உறுப்பினர்களுக்கு ரூ.104.63 கோடி மதிப்பிலான கடன் உதவிகள், நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், ஆர்டிஓக்கள் சுகி பிரேமலா, தனித்துணை ஆட்சியர் புகாரி, எம்.எல்.ஏக்கள் வெங்கடேசன், பூமிநாதன் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) காளிதாஸ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாற்றுத்திறனாளி அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Anish Shekhar ,
× RELATED ராஜினாமாவை திரும்பப் பெற்றார் ஐஏஎஸ் அதிகாரி அனீஷ் சேகர்!